பொது செய்தி

இந்தியா

ராமர் கோவில் கட்டுமானம் நாளை துவங்குகிறது

Updated : ஜூன் 09, 2020 | Added : ஜூன் 09, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

அயோத்தியா: அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமான பணி, சிறப்பு பூஜைகளுடன் நாளை துவங்குகிறது என, 'ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ர டிரஸ்ட்' சார்பில், தகவல் தெரிவிக்கப்பட்டது.



latest tamil news



உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியின், சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதி அளித்தது.

இதையடுத்து, ராமர் கோவில் கட்ட, ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ர டிரஸ்ட் என்ற பெயரில், 15 உறுப்பினர்கள் அடங்கிய அறக்கட்டளை ஒன்றை, மத்திய அரசு பிப்ரவரியில் அமைத்தது.இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை, மார்ச்சில் நடந்தது. ஆனால், கொரோனா பரவலால், பணிகளை தொடர முடியாமல் போனது. இரு மாதங்கள் கழிந்த நிலையில், கடந்த மாதம், 11ல், மண் தோண்டும் பணிகள் துவங்கின. அப்போது, 5 அடி உயர சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து, ராமர் கோவில் கட்டுமான பணி குறித்து, அறக்கட்டளையின் செய்தி தொடர்பாளர் மஹந்த் கமல் தயன் தாஸ், நேற்று கூறியதாவது:ராமர் கோவில் கட்டுமானப் பணி, நாளை முதல் துவங்குகிறது. காலை, 8:00 மணிக்கு, ராம ஜன்மபூமியில் உள்ள, குபேர திலா கோவிலில், சிவனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்


latest tamil news



.ராமர், இலங்கை போருக்கு செல்வதற்கு முன், சிவனை வழிபட்டு புறப்பட்டார் என்பதன் அடிப்படையில், கட்டுமான பணி துவங்குவதற்கு முன், பூஜைகள் நடத்தப்பட உள்ளன. அவை முடிந்த பின், அடிக்கல் நாட்டு விழா நடைபெறும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
09-ஜூன்-202012:17:36 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் இங்கே உள்ள கருத்தை படிக்கும்போது வியப்பாக இருக்கிறது. ஹிந்துக்கள், ஹிந்துக்களாக இல்லாததால் தான் போறவன் வர்றவன் எல்லாம் மதம் மாத்துறான். ஹிந்துக்களை ஹிந்துக்களாக மாற்ற ஒரு இயக்கம் தேவை. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்து பல மாதங்கள் ஆகிவிட்டது. கோவில் -வழிபாடு ஒரு புறம் இருக்கட்டும். மூன்று மாதமாக வருமானம் இல்லாமல் மக்கள் இருக்கிறார்கள். பொருளாதார ரீதியாக பலருக்கு வேலை கிடைக்கும். அதை வைத்து நிறையபேர் வாழ்வாதரம் பெறுவார்கள். ஒரு கோவிலை பக்தியாக பார்ப்பது ஒரு கோணம். கோவிலை வைத்து பிழைப்பு நடத்துவோர் ஏராளம். அவர்கள் எல்லாம் சாமானிய மனிதர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். உச்சநீதிமன்றம் கூறியபின்னரும் அதை எதிர்க்கும் ஹிந்துக்களுக்கு ராமர் தான் நல்ல புத்தி கொடுக்கவேண்டும். ஸ்ரீ ராம ஜெயம்.
Rate this:
Cancel
A E Murugesan - Chennai,இந்தியா
09-ஜூன்-202011:46:50 IST Report Abuse
A E Murugesan இன்று நாடு இருக்கும் சூழ்நிலையில் மிகவும் முக்கியமானது ராமனுக்கு கோவில் கட்டுவது, மக்களின் பிணியையும், பசியையும் போக்க முடியாத சூழலில் ராமனும், அல்லாஹ்வும் தமக்கு கோவில் காட்டுமாறு கோரினார்களா? ஆன்மிகம் என்ற போர்வையில் மக்களின் உழைப்பையும் அன்பளிப்பு என்று மக்களின் பணத்தை வீணடிக்கும் கும்பல் என்று மாறுமோ தெரியவில்லை. ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பதெல்லாம் பொய் போலும்.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
09-ஜூன்-202011:45:54 IST Report Abuse
Indhuindian நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே - தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே- சென்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால். நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம் - வீ டியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும் நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை -சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X