கெஜ்ரிவாலின் முடிவுக்கு கவர்னர் பைஜால் மறுப்பு

Added : ஜூன் 09, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
Kejriwal, delhi news, covid 19, Lieutenant Governor Anil Baijal, coronavirus outbreak

புதுடில்லி: 'டில்லியில் டில்லிவாசிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும்' என்ற, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் முடிவை, துணை நிலை கவர்னர், அனில் பைஜால் நிராகரித்தார்.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி அரசு அமைந்துள்ளது. இங்கு, 'கொரோனா' வைரஸ் பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது.

இந்நிலையில், மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சையின் தரம் குறித்து, சமூக வலை தளங்களில் பலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.


latest tamil news




அதையடுத்து, 'டில்லியில் வசிப்பவர்களுக்கு மட்டுமே டில்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படும்.' மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் அனைத்து தரப்பினருக்கும் சிகிச்சை அளிக்கப்படும்' என, முதல்வர், கெஜ்ரிவால் அறிவித்தார்.

அரசின் இந்த உத்தரவை, டில்லி துணை நிலை கவர்னர், அனில் பைஜால் நிராகரித்தார். அவருடைய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், 'மருத்துவ சிகிச்சை என்பது ஒருவருடைய அடிப்படை உரிமை என்பது, பல தீர்ப்புகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

'டில்லியைச் சேராதவர்களுக்கான சிகிச்சையை மறுக்க முடியாது. அனைத்து மாநில மக்களுக்கும், அனைத்து தரப்பினருக்கும் சிகிச்சை அளிக்கும்படி அறிவுறுத்தவும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumzi - trichy,இந்தியா
09-ஜூன்-202014:53:30 IST Report Abuse
kumzi இவன் டில்லியை தனி நாடு என்று நினைத்துவிட்டானோ தப்லீக் மாநாட்டை தடுத்திருந்தால் கொரோனாவால் இவ்வளவு பாதிப்பு வந்திருக்காது
Rate this:
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
09-ஜூன்-202014:00:20 IST Report Abuse
suresh kumar வாட்சப்பில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது - "டெல்லி ஆஸ்பத்திரிகளில் பகல் கொள்ளை போல் மிரட்டியும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது" என்று. அதை அரசாங்கங்கள் கவனிக்குமா?
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
09-ஜூன்-202010:01:58 IST Report Abuse
Allah Daniel ஒண்ணா நம்பர் அரசியில் சிகண்டி இந்த கேஜ்ரிவால்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X