சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவக் கல்லுாரியில் இணைய தள சேவை முடங்கியதால் புறநோயாளிகள் அவதி

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

விக்கிரவாண்டி, : விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இணையதள சேவை முடங்கியதால் புறநோயாளிகள் பதிவு தாமதமாகி, நோயாளிகள் அவதிக்குள்ளாகியினர்.
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாாரி மருத்துவமனையில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக அரசு ஊரடங்கு அறிவித்ததாலும் நோய் தடுப்பு நடவடிக்கையாக புறநோயாளிகள் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது. கடந்த 1 ம் தேதி முதல் அரசு அறிவித்த 4ம் கட்ட ஊரடங்கின் போது சில தளர்வுகள் அறிவித்ததைத்தொடர்ந்து, புறநோயாளிகள் பிரிவு திறக்கப்பட்டது.ஆனால், பஸ்கள் இயங்காததால் புற நோயாளிகள் பிரிவில் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

தற்போது அரசு பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் புற நோயாளிகள் பிரிவுக்கு தினமும் 1000க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். நேற்று வாரத்தின் முதல் நாள் என்பதால் புறநோயாளிகள் பிரிவில் அதிகளவில் நோயாளிகள் வந்தனர் பதிவு சீட்டு வழங்கும் இடத்தில் திடீரென சர்வரில் இணைய தள சேவை முடங்கியதால், பதிவு சீட்டு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் சீட்டு பதியும் இடத்தில் கூட்டம் அதிகமாகி சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதியடைந்தனர்.தகவலறிந்த கல்லுாரி டீன் குந்தவிதேவி, மருத்துவ கண்காணிப்பாளர் சுப்ரமணி, ஆர்.எம்.ஓ., சாந்தி ஆகியோர் புறநோயாளிகள் பிரிவுக்கு வந்து இணைய தள சேவை கோளாறை சரி செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

உடன் டெக்னீஷியன்கள் சீரமைத்த பின்னர் பதிவு சீட்டு வழங்கும் பணி தொடர்ந்தது. இதனால், சிறிது நேரம் புற நோயாளிகள் கடும் அவதியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X