சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சரிவு! டாஸ்மாக் கடைகளில் விற்பனை...அதிகரிக்கும் கள்ளச்சாராயம் தயாரிப்பு

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

செஞ்சி : கொரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் இல்லாததால், மது பிரியர்கள் கள்ளச்சாராயம் தயாரிப்பில் ஈடுபட்டனர்.
அதையே தொடர்வதால் டாஸ்மாக் கடைகளில் விற்பனையில் சரிவு ஏற்பட்டு வருவதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இது முதல் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. ஊரடங்கு பகுதி தளர்வு அளிக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் 7ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. கடைகளைத் திறந்த அன்று இதுவரை டாஸ்மாக் வரலாற்றில் இல்லாத அளவிற்கு விற்பனை உச்சத்தை தொட்டது.

டாஸ்மாக் கடைகளில் குவிந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முதன் முறையாக டாஸ்மாக் ஊழியர்களுடன் சேர்ந்து போலீசார், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளும் களத்தில் இறக்கினர்.விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்ட முதல் வாரத்தில் இருந்த வசூல் அடுத்து வந்த நாட்களில் சரியத் துவங்கியுள்ளது. ஊரடங்கிற்கு முன்பு இருந்த சராசரி விற்பனையை தொட முடியாததால் விற்பனையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.இதற்கு பொது மக்களிடம் போதிய வருவாய் இல்லாமல் இருப்பது ஒரு காரணமாக சொல்கின்றனர். இருந்த போதும் சத்தமில்லாமல் மற்றொரு காரணமும் இருப்பது தெரியவந்துள்ளது.

ஊரடங்கு காலத்தில் பல கிராமங்களில் மதுப்பிரியர்கள் தாங்களே சொந்தமாக கள்ளச்சாராயம் காய்ச்சத் துவங்கினர். இதன் மூலம் சாராயம் தயாரிப்பில் சிறந்த பயிற்சி பெற்று விட்டனர். தயாரிப்பிற்கான அடக்க செலவு டாஸ்மாக் விலையை விட குறைவாக இருப்பதுடன், வாழைப்பழம், வேலம்பட்டை, கடுக்காய் உள்ளிட்ட பொருட்களால்மிக சுலபமாக கிடைப்பதால், குடிமகன்கள் அதனை வாங்கி கள்ளச்சாராயம் தயாரிக்கும் எண்ணம்குடிமகன்களிடையே உருவாகியுள்ளது.இதனால் டாஸ்மாக் திறந்த பிறகும் சொந்தகள்ளச்சாராயதயாரிப்பை கைவிடாமல் மதுப்பிரியர்கள் பலரும் தொடர்ந்து தங்களுக்கான நாட்டு சரக்கை தாங்களே தயாரித்து வருகின்றனர்.

இதை விற்பனைக்கு கொடுப்பதில்லை. பெரும்பாலும் வீடுகளிலேயே தயாரித்து விடுவதால் வெளியிலும் தெரிவதில்லை. இது போலீசாரின் கவனத்திற்கும் வருவதில்லை. மதுப் பிரியர்களின் சொந்த தயாரிப்பு காரணமாக பொதுவாக மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனை சரிந்து வருவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X