கொரோனா நோயாளிக்கு சிகிச்சை தாலுகா மருத்துவமனைக்கு சீல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா நோயாளிக்கு சிகிச்சை தாலுகா மருத்துவமனைக்கு சீல்

Added : ஜூன் 09, 2020
Share
விக்கிரவாண்டி : கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளி விக்கிரவாண்டி தாலுகா மருத்துவமனைக்கு வந்ததால் மருத்துவமனை மூடி சீல் வைக்கப்பட்டது. விக்கிரவாண்டி தாலுகா அரசு மருத்துவமனைக்கு விக்கிரவாண்டி அடுத்த தென்பேர் புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 56 வயது பெண் ஒருவர் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு வந்தார். பின்னர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு

விக்கிரவாண்டி : கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளி விக்கிரவாண்டி தாலுகா மருத்துவமனைக்கு வந்ததால் மருத்துவமனை மூடி சீல் வைக்கப்பட்டது.

விக்கிரவாண்டி தாலுகா அரசு மருத்துவமனைக்கு விக்கிரவாண்டி அடுத்த தென்பேர் புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 56 வயது பெண் ஒருவர் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு வந்தார். பின்னர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்றபோது, அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமை வார்டில் சிகிச்சை பெற்றவர் நேற்றுமுன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.அவர் சிகிச்சை பெற்ற விபரங்களைக் கண்டறிந்த போது விக்கிரவாண்டி தாலுகா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து நேற்றுபிற்பகல் சுகாதார துறை இணை இயக்குனர் சண்முககனி, துணை இயக்குனர் மணிமேகலை ஆகியோர் விக்கிரவாண்டி தாலுகா மருத்துவமனையில், தாலுகாமருத்துவ அலுவலர் அப்துல் அக்கீமிடம் விபரங்களை கேட்டறிந்தனர்.பின்னர் விக்கிரவாண்டி பேரூராட்சியிலிருந்து துாய்மைப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைமுழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.தொடர்ந்து, அரசு மருத்துவமனையை மூன்று நாட்களுக்குதற்காலிகமாக மூடி சீல் வைத்தனர்.மேலும் மருத்துவமனையில் பணி புரியும் டாக்டர்கள் மற்றும் செவிலியர், பணியாளர்களுக்கு நோய் தொற்று ஏதும் உள்ளதா என பரிசோதனை செய்ய உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X