சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி பிரிந்ததால் கணவர் தற்கொலை

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement
திண்டிவனம் : மனைவி பிரிந்ததால் மன முடைந்த கணவர், தற்கொலை செய்து கொண்டார். திண்டிவனத்தை சேர்ந்தவர் மகபூபாஷா மகன் நிசார்பாஷா,29; இவரது மனைவி ஆயிஷா. இவர்களுக்கு, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், நிசார்பாஷாவிற்கு குடி பழக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஆயிஷா கணவரை பிரிந்து சென்றார். இதனால்

திண்டிவனம் : மனைவி பிரிந்ததால் மன முடைந்த கணவர், தற்கொலை செய்து கொண்டார்.

திண்டிவனத்தை சேர்ந்தவர் மகபூபாஷா மகன் நிசார்பாஷா,29; இவரது மனைவி ஆயிஷா. இவர்களுக்கு, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், நிசார்பாஷாவிற்கு குடி பழக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஆயிஷா கணவரை பிரிந்து சென்றார். இதனால் மனமுடைந்த நிசார்பாஷா, நேற்று முன்தினம் தனது வீட்டில் விஷம் குடித்தார். உறவினர்கள் அவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். திண்டிவனம் நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X