பாக்கம் கூட்ரோட்டில் கடையடைப்பு போராட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாக்கம் கூட்ரோட்டில் கடையடைப்பு போராட்டம்

Added : ஜூன் 09, 2020
Share

கண்டமங்கலம் : கண்டமங்கலம் அடுத்த பாக்கம் கூட்ரோட்டில் வியாபாரியை தாக்கி, கடையை அடித்து, உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாக்கம் கூட்ரோடு கடை வீதியில் நிஜாமுதீன், 52; என்பவர் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் கடைக்குச் சென்று, பொருள் வாங்கிக் கொண்டுபணம் கொடுக்காமல் திரும்பினர்.கடையில் இருந்த சதாம்உசேன் என்பவர் பணம் கேட்டதற்கு தர மறுத்து மூவரும், சதாம் உசேனை தாக்கி, கடையை அடித்து உடைத்தனர். தட்டிக்கேட்ட கடை உரிமையாளர் நிஜாமுதீனையும்தாக்கினர்.இது குறித்து பாக்கம் கூட்ரோடு வணிகர்கள் சங்கத்தின் சார்பில் கண்டமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

மேலும், இந்த சம்பவத்தை கண்டித்தும், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று, பாக்கம் கூட்ரோட்டில் வணிகர்கள் அனைத்து கடைகளையும் மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் சப் இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, பிரபாகர், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் மற்றும் போலீசார், வணிகர் சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதில், சதாம் உசேனை தாக்கி கடையை அடித்து உடைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.இதையடுத்து வணிகர்கள் போராட்டத்தை கைவிட்டு மதியம் 12:00 மணிக்கு கடைகள் திறக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X