பொது செய்தி

தமிழ்நாடு

திருக்கோவிலுாரில் போக்குவரத்து நெரிசல் முடிவுக்கு வருமா?

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் சாலைகளில் தெருவோர கடைகள், இருசக்கர வாகனங்களின் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு உத்தரவு தளர்வு ஏற்பட்டுள்ள நிலையில், திருக்கோவிலுார் நகரில் திரும்பிய பக்கமெல்லாம் மக்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.எந்த கட்டுப்பாடுகளும் மக்களை ஒழுங்குபடுத்த முடியவில்லை. கூட்ட நெரிசலைக் குறைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையாக எஸ்.பி., ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி., மகேஷ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.முதல் கட்டமாக வடக்கு வீதி, சன்னதி வீதி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் இருபக்கங்களிலும் இரு சக்கர வாகனங்களை ஒழுங்காக நிறுத்துவதற்கு வசதியாக சாலையில் கயிறு அடிக்கப்பட்டு வருகிறது.

கடைவீதி, உலகளந்த பெருமாள் கோவில்களுக்கு செல்பவர்கள் கட்டை கோபுரம், மார்க்கெட் வீதியில் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்து செல்ல வேண்டும்.அதேபோல் காரில் பெருமாள் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் காரை சன்னதி வீதியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிறுத்துவதற்கும் வழிவகை செய்து வருகின்றனர். நடைபாதைகளில் கடைக்காரர்கள் செய்திருக்கும் ஆக்கிரமிப்பை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சி நிர்வாகம் போன்றவை ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கை எடுக்காததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு தொற்று அதிகரிப்பதை அறிந்து போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X