பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதல் துணை மின் நிலையம்அமைக்கும் பணிகள் தீவிரம்

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

சின்னசேலம் : சின்னசேலம் அருகே கூடுதல் துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

சின்னசேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான மேல்நாரியப்பனுார், கல்லாநத்தம், ராயப்பனுார், மூங்கில்பாடி, எலவடி உட்பட 50 கிராமங்களுக்கு சின்னசேலம் துணை மின் நிலையத்திலிருந்து மின் இணைப்பு வழங்கப்படுகிறது. மேலும் கிராமங்களில் உள்ள குடியிருப்புகளில் மின் உபயோக பயன்பாடு அதிகளவு உள்ளதாலும் மற்றும் விரைவாக பராமரிப்பு பணிகள், குறைந்த மின்னழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளைத் தவிர்க்க அதிகளவு மின்சாரம் தேவைப்படுகிறது.இது போன்ற பிரச்னையை போக்குவதற்கு மூங்கில்பாடி கிராமத்தில் கடந்த ஆண்டு 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 110 கிலோ வாட் கொண்ட கூடுதலாக துணை மின் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது.

தேவியாக்குறிச்சி துணைமின் நிலையத்திலிருந்து உயர் மின் அழுத்த கம்பங்கள் மூலம் மின்சாரம் கொண்டு வந்து இங்கு சேமிக்கப்படும்.தொடர்ந்து பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் போது, கொரோனா ஊரடங்கால் பணிகள் நிறுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால் மீண்டும் பணிகள் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.இப்பணி முடிவந்தால் மூங்கில்பாடி கிராமத்தைச் சுற்றியுள்ள 20 கிராமங்களுக்கான மின்சாரம், இந்த துணை மின் நிலையத்தில் இருந்து வழங்கப்படும். இதனால் சின்னசேலம் துணை மின் நிலையத்தின் மின் சுமை பாதியாக குறையும் என மின் வாரியத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X