பொது செய்தி

தமிழ்நாடு

நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு? அரசு பரிசீலனை

Updated : ஜூன் 09, 2020 | Added : ஜூன் 09, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
lockdown, curfew, Chennai, covid 19, coronavirus, Tamil Nadu, TN, தமிழகம், மாவட்டம், கொரோனா, ஊரடங்கு

சென்னை : சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த, ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கும்படி அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். இதுகுறித்து, அரசு பரிசீலித்து வருகிறது.

தமிழகத்தில், பெரும்பாலான மாவட்டங்களில், கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. ஆனால், சென்னையில் பாதிப்பு குறைவதாக இல்லை. தினமும், 1,000த்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.சென்னையை ஒட்டிய, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், தொற்று பரவல் அதிகமாக உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அரசின் விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை; ஊரடங்கு என்பது பெயரளவுக்கே உள்ளது. கார், ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் அதிகமாக செல்கின்றன. பல இடங்களில், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.கடைகளுக்கு செல்வோரில், பெரும்பாலானோர் முகக் கவசம் அணிவதில்லை; சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை. இது நோய் பரவல் அதிகரிப்பதற்கு, முக்கிய காரணம்.


latest tamil news


சென்னையில், பாதிப்பு உள்ளவரை மட்டுமே, பரிசோதனைக்கு அழைத்து செல்கின்றனர். குடும்பத்தினர், அவரை சுற்றி உள்ளோரையும் அழைத்து சென்று, பரிசோதனைக்கு உட்படுத்துவது இல்லை. அவர்கள், இஷ்டம் போல வெளியிடங்களுக்கு சென்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவரின் வீட்டில், 'நோட்டீஸ்' ஒட்டப்படுகிறது; வேறு தடுப்பு நடவடிக்கைகள் சரியாக மேற்கொள்ளப்படுவது இல்லை. மக்களும் ஒத்துழைக்காததால், கொரோனா பாதிப்பு அடங்க மறுக்கிறது. எனவே, நோய் பரவலை தடுக்க, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், ஒரு வாரம் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என, அரசுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

இதுபற்றி, அரசு பரிசீலித்து வருவதால், முழு ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pandianpillai Pandi - chennai,இந்தியா
09-ஜூன்-202017:37:26 IST Report Abuse
Pandianpillai Pandi இரண்டு மாசமா ஊரடங்க மக்கள் ஒழுங்காதன பின்பற்றினார்கள். நீங்கள் கோயம்பேட்டில் கோட்டை விட்டு விட்டிர்கள். அதன் பிறகுதான் பரவல் அதிகமாகிவிட்டது. மக்களை குறைசொல்லாதீங்க.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
09-ஜூன்-202016:39:02 IST Report Abuse
Bhaskaran நாளைக்கு ஊரடங்குன்னு இன்னைக்கு காலையில் அறிவிப்பு செஞ்சு அத்தனைபேரையும் கடைகளில் கும்பல் கூட்டாதீங்க எசமானர்களே
Rate this:
Cancel
KUMAR. S - GUJARAT ,இந்தியா
09-ஜூன்-202015:43:36 IST Report Abuse
KUMAR. S காய்கறி மளிகை இறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும். ஒரு வாரத்திற்கு வேண்டியதை வாங்கி வைத்துக்கொள்ள உத்தரவு இடவேண்டும். ..அன்றாடம் வாங்கும் நிலையில் உள்ளவர்களுக்கு அரசு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்கவேண்டும். E-பாஸ் ரத்து செய்யப்பட வேண்டும்... ஊரடங்கு தளர்வு வேண்டாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X