பொது செய்தி

தமிழ்நாடு

நிலவளம், நீர்வளம் திட்டம் குறித்து அதிகாரிகள் ஆய்வு

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

புவனகிரி : புவனகிரி பகுதியில் 'நிலவளம், நீர்வளம் திட்டம் பகுதி 3' படி எட்டு துறை அதிகாரிகள் கிராமங்களில் ஆய்வு செய்து விவசாயிகளிடம் கருத்துக் கேட்டனர்.

தமிழக அரசின், 'நிலவளம், நீர் வளம் திட்டம் பகுதி 3' படி., கிராமங்களுக்கு சென்று விவசாயிகளை நேரில் சந்தித்து மேற்கொள்ள உள்ள திட்டப்பணிகள் குறித்து கருத்துக் கேட்பதற்காக, பொதுப்பணிதுறை, வேளாண் பொறியியல், வேளாண்மை, தோட்டக்கலை, மீன்வளம் உள்ளிட்ட எட்டு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டு மாவட்ட விசாயிகளை சந்தித்து ஆலோசனை கேட்டு வருகின்றனர்.

புவனகிரி தாலுகாவில் அம்பாள்புரம், கிருஷ்ணாபுரம், உடையூர், வத்ராயன்தெத்து உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், கடலுார் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் காயத்திரி, தலைமையில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் பார்த்திபன், அருளரசன், சுற்றுச்சூழல் துறை அன்பழகன் உள்ளிட்ட அதிகாரிகள் கிராமங்களில் ஆய்வு செய்து விவசாயிகளிடம் கருத்துக்கேட்டனர்.இதில் வாலாஜா ஏரி பாசன வாய்க்காலை கரைமேட்டில் இருந்து சொக்கன் கொல்லை வடிகால் வாய்கால் வரை வெட்டி ஆழப்படுத்தினால் தான் விவசாயத்தை பாதுகாக்க முடியும். விவசாயிகள் நலன் கருதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X