மூதாட்டி தீக்குளித்து தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

Added : ஜூன் 09, 2020
Share

குறிஞ்சிப்பாடி : மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கல்குணம், தெற்கு தெருவை சேர்ந்தவர், குப்புசாமி மனைவி, முனியம்மாள், 60. கணவர், மகன் என ஆதரவில்லாத மூதாட்டி, மருமகளுடன் வசித்து வந்துள்ளார். அவர் கால் வலி மற்றும் நீரிழிவு நோய் காரணமாக மனமுடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில், நேற்று முன்தினம் மூதாட்டி முனியம்மாள், தனக்கு தானே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொண்டார். மீட்கப்பட்ட அவர் கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி முனியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X