பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு முககவசம் வீனஸ் பள்ளி தாளாளர் வழங்கல்

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

சிதம்பரம் : சிதம்பரம் வீனஸ் பள்ளியில் 10 வகுப்பு மாணவர்களுக்கு ஹால் டிக்கட் மற்றும் முககவசத்தை தாளாளர் வீனஸ் குமார் வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனா தாக்குதலுக்கு பின் தற்போது பல்வேறு நிபந்தனைகளுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக கல்வித்துறை நிறுத்தப்பட்ட பொது தேர்வை 15 ம் தேதி நடத்த திட்டமிட்டது. அதனையடுத்து நேற்று மாணவர்களுக்கு ஹால் டிக்கட் வழங்கப்பட்டது.பல்வேறு பகுதிகளில் உள்ளூர் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று ஹால் டிக்ெகட் பெற்றனர். சிதம்பரம் வீனஸ் பள்ளியில் 10 ம் வகுப்பு மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுதேர்வுக்கான ஹால் டிக்கட் மற்றும் மாணவர்களுக்கு முக கவசத்தை பள்ளியின் தாளாளர் வீனஸ் குமார் வழங்கினார்.

முன்னதாக பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது. மாணவர்கள் அனைவரும் சானிடைசர் வழங்கி கைகளை சுத்தப்படுத்தி, சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர்.முதல்வர் ரூபியாள்ராணி, துணை முதல்வர் அறிவழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X