துார்வாரும் பணிகளை விரைந்து முடிக்க குடிமராமத்து கண்காணிப்பு அலுவலர் உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

துார்வாரும் பணிகளை விரைந்து முடிக்க குடிமராமத்து கண்காணிப்பு அலுவலர் உத்தரவு

Added : ஜூன் 09, 2020
Share

பரங்கிப்பேட்டை : பாசன வாய்க்காலில் நடந்தும் வரும் துார்வாரும் பணிகளை, விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு, மாவட்ட குடிமராமத்து கண்காணிப்பு அலுவலர் விஜயராஜ்குமார், உத்தரவிட்டார்.

தமிழக முதல் அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ், பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில், அருண்மொழிதேவன், தச்சக்காடு, சின்னகுமட்டி, அத்தியாநல்லுார், தீர்த்தாம்பாளையம், பிச்சாவரம் உள்ளிட்ட கிராமங்களில் பாசன வாய்க்கால்கள், வடிகால் வாய்க்கால்கள் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் மூலம் துார்வாரும் பணிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் குடிமராமத்து திட்டத்தில், குளங்கள் துார்வாரும் பணியும் நடந்து வருகிறது.இந்த பணிகளை நேற்று மாவட்ட குடிமராமத்து கண்காணிப்பு அலுவலர் விஜயராஜ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


பாசன வாய்க்காலில் தண்ணீர் வருவதற்கு முன்பே துார்வாரும் பணிகளையும், மதகு கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உடன் சப் கலெக்டர் விசு மகாஜன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ், ஊராட்சிகளின் செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் குமுதா, பி.டி.ஓ.,க்கள் சிவஞானசுந்தரம், அசோக்பாபு, ஊராட்சி மன்ற தலைவர் சிவசங்கரி ராம்மகேஷ் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X