வீடு புகுந்து தாக்குதல் 7 பேர் மீது வழக்கு| Dinamalar

இந்தியா

வீடு புகுந்து தாக்குதல் 7 பேர் மீது வழக்கு

Added : ஜூன் 09, 2020
Share

பாகூர் : பைக் விபத்து தொடர்பாக வீடு புகுந்து தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் தேடிவருகி்ன்றனர்.

பாகூர் அடுத்த சின்ன ஆராய்ச்சிக்குப்பம் சிவன் கோவில் வீதியை சேர்ந்தவர் வாசுதேவன் மகன் கோகுல் (எ) கோகுலகிருஷ்ணன்,19; பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 6ம் தேதி பைக்கில் ஆராய்ச்சிகுப்பம் ரைஸ்மில் வீதி வழியாக சென்றார்.அப்போது, எதிரே கீழ்பரிக்கல்பட்டு காலனியை சேர்ந்த பிரபு, ராபின் ஆகியோர் வந்த பைக் மீது நேருக்கு நேர் மோதியது. அதில் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.

இந்நிலையில், அன்று மாலை பிரபு, ராபின், ஆராய்ச்சிகுப்பம் காலனியை சேர்ந்த அழகேசன், காமேஷ், மணி, தீன், சந்திரசேகர் உள்ளிட்டோர் கொண்ட ஒரு கும்பல், கோகுலின் வீட்டிற்கு சென்று, சிகிச்சைக்கு பணம் கேட்டனர். அதற்கு கோகுல், மருத்துவமனைக்கு செல்லலாம் என்றார். அதனை ஏற்க மறுத்த அந்த கும்பல், கோகுலை திட்டி தாக்கியது. தடுக்க முயன்ற கோகுலின் தாய் வளர்மதி, அத்தை பத்மாவதி, சித்தி மாலினி, அண்ணன் பத்மநாபன், சித்தப்பா வேலு, பாஸ்கர் ஆகியோரை பிரபு தலைமையிலான கும்பல் செங்கல் மற்றும் தென்னை மட்டையாலும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

மேலும், வீட்டின் முன் நிறுத்தியிருந்த காரின் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பி சென்றனர். இந்த தகராறில் கோகுல் அணிந்திருந்த ஒரு சவரன் தங்க செயினும் மாயமானது. இது குறித்து கோகுல் அளித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்கு பதிந்து, பிரபு, ராபின், ஆராய்ச்சி குப்பம் காலனியை சேர்ந்த அழகேசன், காமேஷ், மணி, தீன், சந்திரசேகர் ஆகியோரை தேடிவருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X