சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காலி குடங்களுடன் கிராம மக்கள் மனு

Added : ஜூன் 09, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கடலுார் : புதிய போர்வெல் மற்றும் நீர்தேக்க தொட்டி அமைக்கக்கோரி, காலி குடங்களுடன் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கடலுார் அருகே குமளங்குளம் ஊராட்சிக்குட்பட்ட வன்னியர் புரம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இங்கு, நீண்ட நாட்களாக குடிநீர் போர்வெல் இல்லாமலும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இல்லாததால் குடிநீருக்கு அவதிப்பட்டு வந்துள்ளனர். அரசிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், நேற்று காலை கிராம மக்கள் காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கலெக்டரை சந்திக்க அவர்கள் அனுமதிக்கப்படாததால், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து, பா.ம.க., மாநில துணைப் பொதுச்செயலாளர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில், கிராம மக்கள் 5 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்கள் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறியதை தொடர்ந்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
09-ஜூன்-202005:19:08 IST Report Abuse
Mani . V ஐநூறுக்கும், ஆயிரத்துக்கும் ஓட்டை விற்ற பலனை (கர்மவினை?) எப்பொழுது அனுபவிப்பது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X