இந்தியா

மணக்குள விநாயகர் கோவில் யானை வேளாண் நிலைய பண்ணைக்கு மாற்றம்

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

புதுச்சேரி : மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி குருமாம்பேட் வேளாண் அறிவியல் நிலைய பண்ணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி, கான்கிரீட் தளத்தில் நிற்பதாலும், சங்கிலியால் கட்டியதாலும் மனதளவில் மிகவும் பாதித்ததாக வனத்துறைக்கு புகார் சென்றது. நேற்று காலை 8 மணிக்கு வனத் துறையினர் வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு வந்து, லட்சுமி யானையை பாகன் உதவியுடன் குருமாம்பேட் கே.வி.கே., பண்ணைக்கு அழைத்து சென்றனர்.8 கி.மீ., நடந்து காலை 9.30 மணிக்கு கே.வி.கே., பண்ணையை அடைந்த யானைக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது. தொட்டியில் தண்ணீர் இல்லை. அரைமணி நேரத்திற்கு பின், மோட்டார் போட்டு தொட்டியில் தண்ணீர் நிரப்பி, தாகம் தணித்தனர்.

யானையை கே.வி.கே., பண்ணைக்கு அழைத்து வரும் முன் தண்ணீரை நிரப்பியிருக்க வேண்டும்.நடந்தது என்னவன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி, புதுச்சேரி வனத் துறை கடந்த 02.02.2011ம் ஆண்டு யானை லட்சுமிக்கு, உரிமையாளர் உரிமம் கோவில் நிர்வாகத்திற்கு வழங்கி உள்ளது. இச்சூழ்நிலையில் லட்சுமியை சரியாக பராமரிக்கவில்லை என கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி வனத் துறைக்கு புகார் வந்தது.இது குறித்து, நிர்வாகத்திடம் கடந்த மே 18ம் தேதி வனத் துறையினர் ஆலோசனை நடத்தினர். யானைக்கு ஏற்பட்ட நோய், அளித்த சிகிச்சை, தடுப்பூசி விபரங்களை வனத்துறையினர் சரிபார்த்தனர்.

இந்நிலையில், யானையை சரியாக பராமரிக்கவில்லை என, கவர்னர் கிரண்பேடிக்கு, மேனகா எம்.பி., புகார் அனுப்பி இருந்தார்.இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம், வனத்துறை விளக்கம் கேட்டும், உரிய பதில் கிடைக்காததால், யானையின் உரிமை யாளர் உரிமத்தை ஏன் ரத்து செய்ய கூடாது என்று கேள்வி எழுப்பி கடந்த 4ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து கே.வி.கே., பண்ணைக்கு லட்சுமி யானை மாற்றப்பட்டுள்ளது.பக்தர்கள் எதிர்ப்புயானை லட்சுமியை கே.வி.கே., பண்ணைக்கு மாற்ற முற்பட்டபோது பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் போலீஸ் பாதுகாப்புடன் யானை லட்சுமி இடமாற்றம் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X