சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெல் வயல்களில் எலி வெட்டு அதிகரிப்பு கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் அவதி

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு பகுதியில் வயல்களில் எலி வெட்டு அதிகரித்து வருவதால் கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.

சேத்தியாத்தோப்பு சுற்று வட்டார பகுதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் போர்வெல் பாசனம் மூலம் குறுவை நெல் நடவு செய்துள்ளனர். குறுவை நடவு செய்து 50 நாட்களுக்கு மேலாகியுள்ள நிலையில் பயிர்கள் நன்கு வளர்ந்துள்ள நெற்பயிர்களை எலிகள் கொத்து கொத்தாக வெட்டி சேதப்படுத்தி வருகின்றன.அதிக செலவு செய்து குறுவை நடவு செய்துள்ள விவசாயிகள் எலிகளின் தொல்லை அதிகரித்து நெற்பயிர்களை சேதப்படுத்துவதால் மன வேதனையடைந்து வருகின் றனர்.விவசாயிகள் எலி மருந்து மற்றும் எலி கிட்டி அமைத்தாலும் ஒரு சில எலிகள் மட்டுமே மாட்டிக்கொள்கின்றனர்.

எலி பிடிப்பதற்கு ஆட்கள் இல்லாத நிலையில் விவசாயிகள் எலி வெட்டியுள்ள நெற்பயிர்களை மனசோர்வை ஏற்படுத்தியுள்ளது.மேலும், வாலாஜா ஏரியிலிருந்து பாசனம் பெறும் பகுதிகளான கரைமேடு, தலைக்குளம், பின்னலுார் ஆகிய பகுதிகளில் நவரை பட்டம் நடவு செய்துள்ள வயல்கள் அறுவடை பருவத்தை எட்டியுள்ள நிலையில் எலிகளின் தொல்லை அதிகரித்து விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.எனவே சம்மந்தப்பட்ட விவசாய அதிகாரிகள், விவசாயிகளை சந்தித்து எலி பொறி வைத்து கட்டுப்படுத்துவது ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்ப்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X