இந்தியா

விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் பெரிய மார்க்கெட் வேறு இடத்திற்கு மாற்றம்

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

புதுச்சேரி : பெரிய மார்க்கெட்டில் விதிமுறைகளை கடைபிடிக்காவிடில் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்படும் என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

அவரது பேட்டி:புதுச்சேரிக்கு வெளி மாநிலத்தில் இருந்து வருவோருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 1ம் தேதி முதல் பெரிய மார்க்கெட்டில் சமூகஇடைவெளி கடைபிடிக்கவில்லை என புகார்கள் வருகின்றன. இதனால் தான் கோயம்பேடு சந்தையில் இருந்து கொரோனா தொற்று அதிகமாக பரவியது. எனவே, பெரிய மார்க்கெட்டில் விதிமுறைகளை கடைபிடிக்கா விட்டால், மார்க்கெட் வேறு இடத்திற்கு மாற்றப்படும்.தனியார் கல்வி நிறுவனங்களில், அரசு நிர்ணய கட்டணத்தைவிட கூடுதலாக வசூலித்தால் பள்ளிக் கல்வித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

நீதிமன்ற தீர்ப் பின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.ஜூலையில் கல்லுாரித் தேர்வுகள் நடத்த இருப்பதாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது தொடர்பாக துணைவேந்தரை தொடர்புகொண்டு பேசினேன். மத்திய அரசு, எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் தேர்வு தொடர்பாக பல்கலைக்கழக அறிவிக்கையை நிறுத்தி வைக்க வலியுறுத்தினேன்.மத்திய அரசின் வழிகாட்டுதல் வந்த பின்னர் தான் தேர்வு நடத்தப்படும் என துணைவேந்தர் உறுதி அளித்துள்ளார்.இவ்வாறு முதல்வர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X