பொது செய்தி

தமிழ்நாடு

பழுதடைந்த சாலைசீரமைக்க கோரிக்கை

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement
புதுச்சத்திரம் : போக்குவரத்திற்கு லாயக்கற்ற புதுச்சத்திரம் - வில்லியநல்லூர் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். புதுச்சத்திரம் - வில்லியநல்லூர் பகுதியைச் இணைக்கும் வகையில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இணைப்பு சாலை உள்ளது.இதில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் தினமும் சென்று வருகின்றன. மேலும் வேளங்கிப்பட்டு, பூவாலை, மணிக்கொல்லை, பால்வாத்துண்ணான்

புதுச்சத்திரம் : போக்குவரத்திற்கு லாயக்கற்ற புதுச்சத்திரம் - வில்லியநல்லூர் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புதுச்சத்திரம் - வில்லியநல்லூர் பகுதியைச் இணைக்கும் வகையில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இணைப்பு சாலை உள்ளது.இதில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் தினமும் சென்று வருகின்றன. மேலும் வேளங்கிப்பட்டு, பூவாலை, மணிக்கொல்லை, பால்வாத்துண்ணான் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் புதுச்சத்திரம், பரங்கிப்பேட்டை பகுதிகளுக்கு செல்லஇந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் தற்போது இந்த சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.இதனால் இரவு நேரங்களில் சைக்கிள், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்வார் அடிக்கடி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம்உள்ளது.

எனவே வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில்கொண்டு, புதுச்சத்திரம் - வில்லியநல்லூர் சாலையை சீரமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X