தொடர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொடர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

Added : ஜூன் 09, 2020
Share
புதுச்சத்திரம் : கடந்த சில நாட்களாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோடைகாலம் துவங்கியது முதல் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது.இந்நிலையில் கடந்த மாதம் 28 ம் தேதி அக்னி நட்சத்திரம் முடிந்தது. ஆனால் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனால் வெயில்சதத்தை கடந்தது.புதுச்சத்திரம் சுற்றுப் பகுதிகளான கொத்தட்டை,

புதுச்சத்திரம் : கடந்த சில நாட்களாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோடைகாலம் துவங்கியது முதல் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது.இந்நிலையில் கடந்த மாதம் 28 ம் தேதி அக்னி நட்சத்திரம் முடிந்தது. ஆனால் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனால் வெயில்சதத்தை கடந்தது.புதுச்சத்திரம் சுற்றுப் பகுதிகளான கொத்தட்டை, அத்தியாநல்லூர், சிலம்பிமங்களம், பால்வாத்துண்ணான், வேளங்கிப்பட்டு, சேந்திரக்கிள்ளை உள்ளிட்ட பகுதிகளில் வேர்கடலை, எள், கம்பு, தர்பூசணி, காய்கறிகள் பயிரிட்டுள்ளனர். எனவேஇந்த பயிர்களுக்கு தினமும் தண்ணீர் பாய்ச்சியும், வெயில் தாக்கம் காரணமாக பயிர்கள் காய்ந்து வந்தது.

இந்நிலையில் புதுச்சத்திரம் சுற்றுப் பகுதிகளில், கடந்த மூன்று நாட்களாக பகலில் வெயிலும், மாலை நேரத்தில் கனமழையும்பெய்தது.இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X