பொது செய்தி

தமிழ்நாடு

நகர் ஏரி தூர்வாரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

வேப்பூர் : வேப்பூர் அருகே ஏரி தூர் வாரும் பணியை விருத்தாசலம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.


வேப்பூர் அடுத்த நகர் ஊராட்சியில் 150 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் உள்ள 200 ஏக்கர் வயல்கள் நீர் பாசன வசதி பெறுகிறது. இதனை, குடிமராமத்து திட்டத்தில் ரூ. 15 லட்சம் மதிப்பில் தூர் வார அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.தூர் வாரும் பணியை விருத்தாசலம் கலைச்செல்வன் எம்.எல்.ஏ., பூமி பூஜையுடன் துவக்கி வைத்தார். அப்போது, பால் வளத்துறை மாவட்ட சேர்மன் பச்சமுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோவிந்தராஜ், உமா, ஊராட்சி தலைவர் சங்கர், வேளாண் கூட்டுறவு வங்கி தலைவர் கருப்பையா, ஊராட்சி துணை தலைவர் ராமசாமி, அ.தி.மு.க., நிர்வாகிகள் நாகராஜன், சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X