இந்தியா

புதுச்சேரியில் மேலும் 9 பேருக்கு தொற்றுகொரோனா பாதிப்பு 127ஆக உயர்வு

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரியில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டது. இதையடுத்து, கொரோனா பாதிப்பு பட்டி யல் 127 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் நேற்று முன்தினம் வரை, 70 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கதிர்காமத்தில் உள்ள கோவிட் மருத்துவமனையிலும், ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், கோவிட் மருத்துமனையில் சிகிச்சை பெற்ற 4 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இதனால், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 66 ஆக குறைந்தது. இதற்கிடையில், புதுச்சேரியை சேர்ந்த 8 பேருக்கும், மாகியை சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி யானது. அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கோவிந்தசாலை, கதிர்காமம் ஆனந்தா நகர், கோரி மேடு சிவாஜி நகர், பொய்யாக்குளம், வீமநகர், மூகாம்பிகை நகர், வில்லியனுார் ஆச்சாரியாபுரம், கோரிமேடு போலீஸ் குடியிருப்பு ஆகியபகுதிகளை சேர்ந்த 8 பேர் பாதிக்கப்பட்டுள் ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், தொடர்பில் இருந்தவர்கள் என்ற அடிப்படையில் 8 பேருக்கும் கொரோனா பரவி உள்ளது.அபுதாபியில் இருந்து மாகிக்கு திரும்பியவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, மாகி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாகியில் ஏற்கனவே 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இவர்கள் அனைவரும் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி விட்டனர். தற்போது, மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.புதுச்சேரியில் மொத்த பாதிப்பு 127 ஆக உயர்ந்துள்ளது. இதில், 75 பேர் சிகிச்சை பெறுகின்றனர்; 52 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X