பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளாற்றில் முட்புதர்களை அகற்றிட பொதுமக்கள் கோரிக்கை

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

புவனகிரி : மழை காலங்களில் மிகுந்த பாதிப்பு ஏற்படும் முன் புவனகிரி வெள்ளாற்றில் மண்டியுள்ள கருவை முட்புதர்களை அகற்றிட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

புவனகிரி வெள்ளாற்றுப்பாலத்தின் மேற்கு பகுதியான பெருமாத்துார், வண்டுராயன்பட்டு, ஆயிப்பேட்டை, சேத்தியாத்தோப்புகுறுக்கு ரோடு வரையும் கிழக்கில் பரங்கிப்பேட்டை, ஆதிவராக நல்லுார், தம்பிக்கு நல்லான் பட்டினம், கீரப்பாளையம், புவனகிரி, சுற்று பகுதியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தும், தண்ணீர் உவர்ப்பு தன்மையாக மாறியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளனர். புவனகிரி அருகே ஆதிவராக நல்லுாரில் தடுப்பணைக்கட்டி நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க வேண்டும் என புவனகிரியில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் அரசு நடவடிக்கை எடுக்க வில்லை.

மேலும் வெள்ளாற்றில் மண்டியுள்ள கருவை முட்புதற்களால் நிலத்தடி நீர் மட்டம் மாறியுள்ளதுடன், மழைகாலங்களில் தண்ணீர் வடியாமல் தேங்கி, மிகுந்த பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே மழை காலம் துவங்கும் முன் இப்பகுதியில் மண்டியுள்ள கருவை முட்புதற்களை வெட்டி அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X