இந்தியா

ரோட்டரி  காஸ்மாஸ்  சங்கம் நிவாரண உதவி வழங்கல்

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

புதுச்சேரி, : ரெயின்போ நகரில் துப்புரவு தொழிலாளர்களுக்கு ரோட்டரி காஸ்மாஸ் சங்கம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் புதுச்சேரி ரோட்டரி காஸ்மாஸ் சங்கம் சார்பில் வாழ்வாரத்தை இழந்துள்ள பல்வேறு தரப்பு மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் ரெயின்போ நகரில் ரோட்டரி காஸ்மாஸ் சங்கம் சார்பில் துப்புரவு தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.புதுச்சேரி ரோட்டரி காஸ்மாஸ் சங்க தலைவர் செந்தில் முன்னிலையில், சிறப்பு விருந்தினர் டாக்டர் விஜயகுமாரி, முன்னாள் கவுன்சிலர் குமரன், மாவட்ட ரோட்டரி ஆளுநர் செல்வநாதன், துணை ஆளுநர் பிரேம்ராஜ் ஆகியோர், ஊரடங்கிலும் வீதிகளில் துாய்மை பணியில் ஈடுபட்டு வரும் துப்புரவு தொழிலாளர்களை பாராட்டி, நிவாரண உதவிகள் வழங்கினர். நிகழ்ச்சியில் காங், சிறப்பு அழைப்பாளர் வினோத், வக்கீல் தினேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு, கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X