மனநலம் பாதித்த சிறுமி கர்ப்பம் போக்சோவில் விவசாயி கைது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனநலம் பாதித்த சிறுமி கர்ப்பம் 'போக்சோ'வில் விவசாயி கைது

Added : ஜூன் 09, 2020
Share
சிதம்பரம் : மனநலம் பாதித்த சிறுமியை கர்ப்பமாக்கிய விவசாயியை, 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், சிதம்பரம் அருகே பு.முட்லுார் அடுத்த தீத்தாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமன், 45; விவசாயி. அதே ஊரைச் சேர்ந்த, மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி, குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக தனது வீட்டிற்கு 'டிவி' பார்க்க வந்த

சிதம்பரம் : மனநலம் பாதித்த சிறுமியை கர்ப்பமாக்கிய விவசாயியை, 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் அருகே பு.முட்லுார் அடுத்த தீத்தாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமன், 45; விவசாயி. அதே ஊரைச் சேர்ந்த, மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி, குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக தனது வீட்டிற்கு 'டிவி' பார்க்க வந்த அச்சிறுமியை, ராமன், வலுகட்டாயமாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.கடந்த வாரம், சிறுமியின் உடல்நிலையில் மாற்றத்தை அறிந்த அவரது தாய், டாக்டரிடம் அழைத்துச் சென்றார். சிறுமியை பரிசோதித்த டாக்டர், அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.

இது குறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில், சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.அதில், சிறுமியின் கர்ப்பத்திற்கு ராமன்தான் காரணம் என, தெரிய வந்தது. அதையடுத்து, 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, ராமனை கைது செய்தனர். ராமனுக்கு திருமணமாகி, 3 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X