சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மேலும் 4 பேருக்கு கொரோனா விழுப்புரம் பாதிப்பு 384 ஆக உயர்வு

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் பாதிப்பு 384 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில், இருவர் இறந்தனர். கொரோனா தொடர்பாக 53 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், திண்டிவனம்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் பாதிப்பு 384 ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில், இருவர் இறந்தனர். கொரோனா தொடர்பாக 53 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், திண்டிவனம் மரக்காணம் சாலையைச் சேர்ந்த 45 வயது நபர். கோயம்பேட்டில் இருந்து திரும்பிய விக்கிரவாண்டி மேட்டுத் தெருவைச் சேர்ந்த 45 வயது நபர். மும்பையில் இருந்து திரும்பிய செஞ்சி அடுத்த பொன்னம்பூண்டியைச் சேர்ந்த 28 வயது பெண். புதுச்சேரியில் இருந்து திரும்பி வந்த வளவனுாரைச் சேர்ந்த 31 வயது நபர் என 4 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் பாதிப்பு 384 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா முன்னெச்சரிக்கையாக மாவட்டத்தில் 318 பேர் வீடுகளிலும், சுகாதாரத்துறை சிறப்பு மையங்களில் 203 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.விழுப்புரம் அடுத்த தென்பேர் புதுப்பாளையத்தைச் சேர்ந்த 56 வயது பெண் கொரோனாவால் இறந்தது குறித்து நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவரது உடல் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் நகராட்சி முக்தி மின்தகன மேடையில் தகனம் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X