பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு மேலாண்மையில் அசத்துகிறது 'ஆனந்தபவன்'

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

கடலுார் : கடலுார் ஆனந்தபவன் ஓட்டலில், கொரோனா தடுப்பு மேலாண்மை நெறிமுறைகளை சரியாக கடைபிடித்து, வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறப் படுகிறது.

கொரோனா ஊரடங்கின் தளர்வு காரணமாக, 76 நாட்களுக்கு பிறகு, நேற்று முதல் ஓட்டல் களில் அமர்ந்து சாப்பிட அரசு அனுமதி வழங்கியது. அதை தொடர்ந்து, கடலுார் மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான ஓட்டல்கள் திறக்கப்பட்டன.கடலுாரில் இயங்கிவரும் ஆனந்தபவன் ஓட்டலில், கொரோனா தடுப்பு மேலாண்மை நெறிமுறைகள், முறையாக கடைபிடிக்கப்பட்டிருந்தது. உணவு சாப்பிட தட்டு, டம்ளர் தவிர்த்து, வாழை இலை, குடிநீருக்காக ஒரு முறை உபயோகிக்கும் பேப்பர் கப் பயன்படுத்தப்பட்டது. சமையலர், பரிமாறுவோர் உள்ளிட்ட பணியாளர்கள் கை யுறை, முக கவசம், அணிந்திருந்தனர்.

இது தொடர்பாக ஓட்டல் உரிமையாளர் ஆனந்தபவன் நாராயணன் கூறியதாவது: வாடிக்கையாளர்கள் 1 மீட்டர் இடைவெளியில் அமரும் வகையில், மேசை வசதி செய்யப்பட்டுள்ளது. தெர்மல் ஸ்கேனர் மூலம் வாடிக்கையாளர் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. வாடிக்கையாளர் கைகளை சுத்தம் செய்ய, ஓட்டல் வாயிலில் தானியங்கி சானிடைசர் இயந்திரம், சோப்பு வைக்கப்பட்டுள்ளது. கழிவறை, கை கழுவும் இடம் மற்றும் வாடிக்கையாளர்கள் கை படும் இடங்கள் அடிக்கடி சானிடைசர் மூலம் சுத்தம் செய்யப்படுகிறது.சமையல் கூடங்களி லும், சமூக இடைவெளியை கடைபிடித்து, சுகாதார முறையில் உணவு சமைக்கப்படுகிறது.

பணியாளர்களும் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.50 சதவீதம் பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படுவதால், காலை, 6:00 முதல், இரவு, 8:00 மணி வரை என்பதை, இரவு, 10:00 வரை ஓட்டல்கள் செயல்பட அரசு அனுமதித்தால் வசதியாக இருக்கும். வெயில் தாக்கம் 100 டிகிரிக்கு குறையாமல் இருப்பதால், உணவகங்களில் குறைந்த அளவில் 'ஏசி' இயக்க அரசு அனுமதி தர பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X