சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலுார் மாவட்டத்தில் கொரோனா பலி 3 ஆனது

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

கடலுார் : கடலுார் மாவட்டத்தில், கொரோனா தொற்று பாதித்த நபர், சிதம்பரம் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை, மூன்றாக அதிகரித்துள்ளது.

கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நேற்று சென்னையில் இருந்து வந்த அண்ணாகிராமத்தை சேர்ந்த 38 வயது ஆண், கடலுார் சரவணா நகரை சேர்ந்த 57 வயது ஆண் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 489 ஆக அதிகரித்துள்ளது.இதில், கடலுாரை சேர்ந்த நபர், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உயிரிழந்தார்.இவர் ஏற்கனவே உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், காய்ச்சலால் நேற்று முன்தினம் கடலுார் அரசு மருத்துவமனைக்குவந்தார்.

பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானதால், சிதம்பரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இறந்தார். அவரது உடல், நேற்று கம்மியம்பேட்டை சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.கடலுார் மாவட்டத்தில் ஏற்கனவே, லால்பேட்டையை சேர்ந்த 49 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த மாதம் 12ம் தேதியும், கடலுாரை சேர்ந்த 87 வயது முதியவர் கடந்த 4ம் தேதியும் உயிரிழந்தனர். நேற்று ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, மாவட்டத்தில் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X