சம்பவம் செய்தி

தமிழ்நாடு

l பயிர் காப்பீடு செய்த விவசாயிகள்.. இழப்பீடு முழுமையாக வழங்காமல்/ அலைக்கழிப்பு

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

ராமநாதபுரத்தில் 2018-19ம் ஆண்டுக்கு விவசாயிகள் நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்திருந்தனர். காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

பாதிப்படைந்த பாதிபேர்களுக்கு காப்பீடுநிறுவனம் இழப்பீடு வழங்கவில்லை்.இது குறித்து வைகை பாசன விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் மதுரைவீரன் தெரிவித்ததாவது: மாவட்டத்தில் 117 கிராம விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. 5 ஏக்கருக்குமேல் உள்ள விவசாயிகள் 3 ஆயிரம் பேருக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.சென்னையில் உள்ள பயிர் காப்பீடு நிறுவனம் கொரோனா பாதிப்பு காரணமாக முழுமையாக இயங்கவில்லை. இது குறித்து பயிர் காப்பீட்டு நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது, என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா பாதிப்பால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும், என்றார்.வேளாண் இணை இயக்குனர் ேஷக் அப்துல்லா தெரிவித்ததாவது:இதுவரை 322 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 101 கிராம விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. அதற்கான தொகை பயிர் காப்பீட்டு நிறுவனம் வழங்கியுள்ளது.சென்னை ராயபுரத்தில் கொரோனா பாதிப்பால் பாதுகாக்கப்பட்ட பகுதியில் காப்பீட்டு நிறுவனம் உள்ளதால் அந்த தொகை கிடைப்பதில் தாமாதம் ஏற்பட்டுள்ளது. அங்கு சீரானவுடன் சில நாட்களில் இழப்பீட்டு தொகை வழங்கப்படும்., என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X