சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரட்டை கொலை வழக்கில் கூலிப்படையை சேர்ந்தவர் கைது

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் 2018ல் வெடிகுண்டு வீசி இருவரை கொலை செய்த வழக்கில், கூலிப்படையை சேர்ந்த நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டி தங்கச்செல்வம் 40, என்பவரை போலீசார் கைதுசெய்தனர்.

ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் 2018 அக்.,16ல் வாலாந்தரவையை சேர்ந்த கார்த்திக் 36, ராமநாதபுரம் கருவேப்பிலைக்காரத்தெருவை சேர்ந்த விக்னேஷ்வரன் 27, ஆகியோரை வெடிகுண்டு வீசி வெட்டி கொலை செய்தனர்.கேணிக்கரை போலீசார் 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். 5 பேர் சரணடைந்தனர். மீதி 4 பேரை போலீசார் தேடினர்.19 மாதங்களுக்குப்பின் கூலிப்படையை சேர்ந்த நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டியை சேர்ந்த தங்கச்செல்வம் என்பவரை போலீசார் செவல்பட்டி விலக்கில் கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X