சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சம்பளம் வழங்க முடியல ; சிரமத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள்

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

சிவகாசி, : -பட்டாசுக்கு வெளி மாநில ஆர்டர்கள் கிடைக்காததால் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் ஆலை உரிமையாளர்கள் சிரமப்படுகின்றனர்.சிவகாசி பகுதியில் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன.

கொரோனா ஊரடங்கால் ஆலைகள் இரு மாதங்களாக இயங்கவில்லை. தளர்வு அறிவிக்கப்பட்ட பின் உற்பத்தி பணி நடந்து வருகிறது. பொதுவாக ஆண்டின் மத்தியில் வெளி மாநில வியாபாரிகள் முன்பணத்துடன் ஆர்டர் கொடுப்பர். ஊரடங்கால் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல தளர்வுகள் அறிவிக்கவில்லை. இதனால் தீபாவளிக்கு வெளிமாநில வியாபாரிகள் ஆர்டர் கொடுக்க வரவில்லை. சிறு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கின்றனர். ஆர்டரின்பேரில் வழங்கும் முன் பணத்தைத் தான் தொழிலாளர்களுக்கு சம்பளமாக வழங்குவர். ஆர்டர் வராததால் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது .

உரிமையாளர்கள் சிரமப்படுகின்றனர்.சிறுபட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி: வெளி மாநில வியாபாரிகள் இங்கு வந்த செல்ல சிறப்பு அனுமதி வழங்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X