சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அலட்சியம்

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement


கொரோனா மனிதர் களிடமிருந்து மனிதர்களுக்கு பரவக் கூடிய தொற்று. கைகள், வாய், மூக்கு, கண்கள் வழியாக உடலை தாக்கும் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்து வேகமாக பரவிய நோய் தொற்றை தடுத்தது.

வெளி,மாநிலம் நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு பரிசோதனை நடத்தி தொற்று பாதித்தவர்களை தனிமைபடுத்தி நோய் தொற்றில் இருந்து காப்பாற்றி உள்ளது அரசுகள். கைகளை சானிடைசர் மூலம் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். வெளியில் நடமாடும் போதும், கடைகளில் பொருட்கள் வாங்க செல்லும் போதும் போதுமான சமூக இடைவெளி, முக கவசம் அணிந்து செல்ல அரசு அறிவுறுத்துகிறது. ஆனால் பலுரும் போதுமான விழிப்புணர்வு இன்றி முகக் கவசம் அணியாமல் வெளியில் நடமாடுகின்றனர். போலீசார் கண்காணித்து எச்சரித்து அபராதம் விதித்தாலும் அலட்சியம் செய்கின்றனர்.

டூவீலர்களில் நெருக்கமாக 3 பேர் உட்கார்ந்து செல்கின்றனர். இது போன்ற நிலையால் தொற்று பரவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.இதை தடுக்க மக்களாகிய நாம்தான் முன்ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும்.ஆபத்தில் முடியும்கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து 6 அடிதுாரம் வரை பரவும் கிருமி. காற்று அதிகமாக வீசுவதால் மேலும் சில அடிதூரம் பரவலாம் என்பதால் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். ஒரு நேரத்தில் 4 முதல் 5 பேரை தாக்கும் என்பதால் அலட்சியம் ஆபத்தில் முடிந்துவிடும். தொற்று பாதித்தால் குறைந்தது 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டியுள்ளது.

குடும்பத்தலைவர் பாதிப்பு ஏற்பட்டால் வருமானம் பாதித்து அனைவரும் சிரமப்பட நேரிடும். சிரமத்தை உணர்ந்து அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்.பாலன், டூவீலர் மெக்கானிக், சாத்துார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X