பாக்.,கில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது

Updated : ஜூன் 09, 2020 | Added : ஜூன் 09, 2020
Share
Advertisement
Pakistan, covid 19, death toll, corona, coronavirus, பாகிஸ்தான், கொரோனா

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது; பலி எண்ணிக்கையும் 2 ஆயிரத்தை கடந்தது.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இன்னும் வெற்றி அடையாததால், பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அண்டை நாடான பாகிஸ்தானில், கடந்த, 24 மணி நேரத்தில், கொரோனா வைரசால், 4,728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, பாக்.,கில் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 1 லட்சத்து, 3,671 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை, 2,067 ஆக உயர்ந்துள்ளது. 34 ஆயிரத்து, 355 பேர் சிகிச்சைக்குப் பின், குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை, 7 லட்சத்து, 5,833 பேருக்கு, மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.


latest tamil news



முன்னாள் பிரதமருக்கு கொரோனா:


இந்நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சித் தலைவருமான ஷாஹித் கக்கான் அப்பாசிக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X