பொது செய்தி

தமிழ்நாடு

கீழடியில் செங்கல் கட்டுமானம் அதிகம்

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

திருப்புவனம் : கீழடி அகழாய்வில் செங்கல் கட்டுமானங்கள் அதிகம் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் 40லட்ச ரூபாய் செலவில் கீழடி, அகரம், கொந்தகை, மணலுாரில் நடக்கிறது. இதுவரை நடந்த 5 கட்ட அகழாய்விலும் கிடைத்த செங்கல் கட்டுமானங்களும், 6ம் கட்ட அகழாய்வில் கிடைத்த செங்கல் கட்டுமானங்களும் ஒரே ஆழத்தில் கிடைத்துஉள்ளன. கீழடியில் கிடைக்கும் செங்கல் கட்டுமானங்கள் அனைத்தும் தரை தளமாகவே இருக்க வாய்ப்புஉள்ளதாக கருதப்படுகிறது.அகழாய்வின் போது 15 அடி ஆழத்திற்கு மேல் தோண்டுவது கிடையாது. காரணம் அதற்கு கீழே மண்ணின் தன்மை மாறிவிடும். கீழடியில் முதல், 2ம் கட்ட அகழாய்வில் கிடைத்த செங்கல் கட்டுமானங்களும் தற்போது கிடைக்கும் செங்கல் கட்டுமானங்களும் ஒரே மாதிரியாக உள்ளன.

இது பெரும்பாலும் குடியிருப்பு பகுதியாக இன்றி, தொழில் நகரமாகவே இருக்க வாய்ப்பு அதிகம். காரணம் செங்கல் கட்டுமானங்கள்அனைத்தும் குறுகிய கால்வாய், சுவர்களாகவே உள்ளன. அகழாய்வில் கிடைத்த பானைகள் அனைத்தும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் அமைப்பை போலவே உள்ளது. கீழடியில் கிடைத்த இரும்பு கழிவுகள், ஆயுதங்கள் தொழிற்கருவிகள் செய்யும் இடத்தை குறிக்கிறது. தற்போது கிடைத்துள்ள தரைதளங்களுக்கு கீழே வேறு சுவர்கள் செங்கல் வரிசைகளில் இல்லை.பெரும்பாலும் சுட்ட செங்கற்களை கொண்டு சுவர் அமைத்துள்ளனர். வெளிப்புற சுவர்கள் தரைதளம் உள்ளிட்டவற்றிற்கு பெரிய செங்கற்களும், உட்புற சுவர்கள், கால்வாய்கள் போன்றவற்றிற்கு சிறிய செங்கற்களும் பயன்படுத்தியுள்ளனர்.

கட்டுமானங்கள் அனைத்தும் தொழில்நுட்பங்கள் நிறைந்தவையாக உள்ளன. கீழடியில் இன்னும் கூடுதலான பரப்பளவில் அகழாய்வை மேற்கொண்டால் மட்டுமே முழு பரிணாமமும் தெரியவரும் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X