4 கி.மீ.,க்கு கால்வாய் ஆக்கிரமிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

4 கி.மீ.,க்கு கால்வாய் ஆக்கிரமிப்பு

Added : ஜூன் 09, 2020
Share

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டில் 4 கி.மீ.,க்கு கண்மாய் மறுகால் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு தண்ணீர் வராததால் 2 ஆயிரம் ஏக்கர் நிலம் பாழடைந்து உள்ளது.

பழைய வத்தலக்குண்டு பெரிய கண்மாயில் மறுகால் பாயும் தண்ணீர் வாய்க்கால் மூலம் கண்ணாபட்டி பெரிய கண்மாயைச் சென்றடைகிறது. நான்கு கி.மீ., துாரம், 60 அடி அகலமுள்ள இக்கால்வாயை இரு கரையோரம் உள்ள விவசாயிகள் ஆக்கிரமித்ததால் 3 அடியாக சுருங்கி உள்ளது. சில இடங்களில் விவசாயிகள் பொதுப்பாதையை மறைத்து முள் வேலி அமைத்துள்ளனர். சில இடங்களில் பொதுப்பணித்துறை அனுமதியின்றி பாலங்கள் கட்டி உள்ளனர்.

வேலி வைத்து அடைத்ததால் கால்வாயின் கீழ் பகுதியில் உள்ள நிலங்களுக்கு செல்ல முடியவில்லை. வேலியை அகற்றினால் தகராறு ஏற்பட்டு சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. கீழ்ப் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களுக்குச் செல்ல 5 கி.மீ., சுற்ற வேண்டியுள்ளது. இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆக்கிரமிப்பை அகற்றினால் பாழடைந்துள்ள 2 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X