செவ்வாய் கிரகத்தில் களிமண் எரிமலை குறித்த ஆய்வு

Updated : ஜூன் 09, 2020 | Added : ஜூன் 09, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

வாஷிங்டன்: நாசா செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கு நீண்ட நாட்களாக திட்டமிட்டு வருகிறது. விஞ்ஞானிகள் தற்போது ஓர் புதிய உண்மையை கண்டறிந்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் உள்ள ஃபயர் பிரீதிங் வேல்கனோஸ் எனப்படும் எரிமலைகள் பற்றி ஆராய்ந்தனர். செவ்வாய் கிரகத்தின் வடக்குப் பகுதியில் மட் வேல்கனோஸ் எனப்படும் களிமண் எரிமலைகளால் பல மலைகள் உருவாகி உள்ளதாகக் கண்டறிந்துள்ளனர்.



latest tamil news




செவ்வாய் கிரகத்தில் இருக்கும் தண்ணீர் கலவை கொண்ட களிமண் குறித்த ஆராய்ச்சி இன்னும் நடைபெற்றவண்ணமே உள்ளது. ஜெர்மன் ஏரோஸ்பேஸ் செண்டர் நடத்திய ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. குறைந்த அழுத்தத்தில் களிமண் எரிமலைக் குழம்பு போலவே நடந்துகொள்கிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வின் முடிவு நேச்சர் ஜியோசயின்ஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. எரிமலை வெடிப்புக்குப் பெயர்போன செவ்வாய் கிரகத்தில் இந்த புதிய கண்டுபிடிப்பு வரவேற்பைப் பெற்றுள்ளது.


latest tamil news



பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் குறுகிய காலகட்டத்தில் அதிக மண் குவிந்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து களிமண் எரிமலைகள் குறித்து தொடர்ந்து ஆராயப்படுகிறது என பெர்லின் வானவியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி எர்னஸ்ட் ஹவுபர் தெரிவித்துள்ளார். மட் வால்கலிஸம் எனப்படும் இந்த வகை எரிமலை பூமியிலும் உள்ளது. இதில் படியும் களிமண் நாள்பட இளகி மீண்டும் நிலத்தின் அடியில் செல்லும் தன்மை கொண்டது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஜூன்-202015:36:23 IST Report Abuse
ஸாயிப்ரியா முதலிலேயே தெரிந்து இருந்தால் போக்கு வரத்து வசதி இருந்தால் நம்ம ஊரு புள்ளிகள் களிமண் ஆக்கி இருக்க மாட்டார்கள் மணலாகவே கொண்டு வந்து இருப்பர்.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
09-ஜூன்-202013:13:31 IST Report Abuse
skv srinivasankrishnaveni ரொம்பவே தேவை போங்கையாப்போங்க முதல்ல கொரோனாவுக்கு பெஸ்ட் மருந்துகண்டுபிடிங்க எல்லோருக்கும் தரலாம் ஆனால் சீனாக்குமாய்=ட்டுமதறாதீங்க அதுகளியேபிடிசுண்டுபோயி செவ்வாய்க்கிரகத்துலே தள்ளுங்க புண்ணியமாப்போவும் கூடவே துணைக்கு டொனால்டு ட்ரம்பையும் கூட இலவச இணைப்பாக தரலாம்
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
09-ஜூன்-202011:53:01 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு இங்கே தண்ணீரை பாட்டிலில் அடைத்து வியாபாரம் செய்து விட்டு SEVVAI கிரகத்தில் தண்ணீர் உள்ளதா என்ரூ பார்க்க கோடி கணக்கில் செலவு சேயும் மூடர் கூடம் அப்புறம் எப்படிற் இருப்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X