சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காட்டு யானைகளை கட்டுபடுத்த மூணாறில் வியாபாரிகள் போராட்டம்

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

மூணாறு : மூணாறு நகருக்குள் காட்டு யானைகள் நுழைவதை கண்டித்து தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் தலைமையில் நடந்த ரோடு மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மூணாறில் இரண்டு மாதங்களாக காட்டு யானைகள் நகருக்குள் நுழைந்து கடைகளை சேதப்படுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்த இரண்டு ஆண் காட்டு யானைகள் நான்கு கடைகளை சேதப்படுத்தின. வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானைகளை விரட்டியதால் பல கடைகள் தப்பியது.மறியல்: காட்டு யானைகள் நுழைந்து கடைகளை சேதப்படுத்துவதை கண்டித்து தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் தலைமையில் வர்த்தகர்கள் ரோடு மறியல் செய்தனர். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வன உயிரின உதவி பாதுகாவலர் ஜோப் ஜே. நேரியம்பரம்பில், எம்.எல்.ஏ. வுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் நகரில் யானைகள் நுழைய விடாமல் தடுப்பதாகவும், சேதமடைந்த கடைகளுக்கு இழப்பீடு வழங்குவதாகவும் உறுதி அளித்ததால் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். சமூக இடைவெளியை கடை பிடிக்காமல் ஏராளமானோர் மறியலில் ஈடுபட்டது அதிருப்தியை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X