தமிழ்நாடு

மாமல்லை சிற்பங்கள் திறக்க வாய்ப்பில்லை

Added : ஜூன் 09, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 மாமல்லை சிற்பங்கள் திறக்க வாய்ப்பில்லை

மாமல்லபுரம்: தொல்லியல் சின்னங்களை, நேற்று முதல் திறக்க, மத்திய அரசு உத்தரவிட்டும், கொரோனா பரவலால், மாமல்லபுரம் சிற்பங்கள் திறக்கப்படவில்லை.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், மத்திய அரசு, அனைத்து பாரம்பரிய சின்னங்களையும், நேற்று முதல் திறக்க உத்தரவிட்டது.ஆனால், கொரோனா தொற்று அதிகம் பரவும் மாவட்டங்களில் ஒன்றான செங்கல்பட்டில், இம்மாதம் இறுதி வரை, கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளதால், மாமல்லபுரம் கலை சின்னங்கள் திறக்கப்படாது என, தொல்லியல் துறை கூறியுள்ளது.மேலும், இத்துறையின் கீழ் உள்ள, வழிபாட்டு கோவில்களும் திறக்கப்படாது என, அறிவித்துள்ளது.

இது குறித்து, தொல்லியல் துறையினர் கூறியதாவது:தொல்லியல் சின்னங்களை திறக்க, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை, கொரோனா கட்டுப்பாடு பகுதியாக, தமிழக அரசு அறிவித்துள்ளதால், இப்பகுதி சின்னங்களை, இம்மாத இறுதி வரை திறக்க மாட்டோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஜூன்-202020:23:49 IST Report Abuse
kulandhai Kannan கலை ஆர்வத்தோடு செல்பவர்கள் சிலர். கடலை மிட்டாய் தின்னச் செல்பவர் பலர்.
Rate this:
Cancel
09-ஜூன்-202012:04:17 IST Report Abuse
ஆப்பு ஜிங் ஜிங் வந்து போனதுக்கப்புறம் மாமல்லபுரம் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X