சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குற்றங்களில் ஈடுபட்ட 13 ரவுடிகள் கைது

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி என, பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட, 13 ரவுடிகளை, போலீசார் நேற்று, கைது செய்தனர்.

இது குறித்து, மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிவகாஞ்சி, விஷ்ணு காஞ்சி, ஸ்ரீபெரும்புதுார், பாலுசெட்டி சத்திரம், மணிமங்கலம், சோமங்கலம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி என, பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடிகள், 13 பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.மேலும், 38 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, திருந்தி வாழ்வதாக பிணைய பத்திரம் பெறப்பட்டு, விடுவிக்கப்பட்டனர்.

குற்றங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை கண்காணித்து கட்டுப்படுத்தும் வகையில், 86 பேர் மீது வழக்கு பதிவேடு துவங்கப்பட்டு உள்ளது. தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் மீது, கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X