சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

திருட முயன்றவர் கைது

ஸ்ரீபெரும்புதுார் - ஸ்ரீபெரும்புதுார்- - சிங்கபெருமாள் கோவில் சாலை, ஒரகடம் பஜார் பகுதியில், ஒரகடம் போலீசார், நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.அங்குள்ள மொபைல் கடையின் பூட்டை, வாலிபர் உடைத்து கொண்டிருப்பதை, போலீசார் பார்த்தனர். அந்நபரை பிடித்து விசாரித்ததில், செம்மஞ்சேரியைச் சேர்ந்த சிவசங்கர், 21, என்பதும், தன்னிடம் மொபைல் போன் இல்லாததால், கடையை உடைத்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார், சிவசங்கரை கைது செய்தனர்.

அசாம் வாலிபர் தற்கொலை

மாமல்லபுரம் - கல்பாக்கம் அடுத்த, குன்னத்துார் பகுதியில், தனியார் இறால் பண்ணை உள்ளது. இங்கு, அசாம் மாநிலம், ஜெடிந்தேர்தாஸ் மகன் அகில்தாஸ், 36, எட்டு மாதங்களாக பணிபுரிந்தார். இந்நிலையில், பண்ணை பகுதி குடிசையில், நேற்று காலை, 10:00 மணிக்கு, அவர், துாக்கிட்டு இறந்தார். சதுரங்கப்பட்டினம் போலீசார், சடலத்தை மீட்டு, விசாரிக்கின்றனர்.

பெட்ரோலுக்கு பணம் தராதோர் கைது

ஸ்ரீபெரும்புதுார் - ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, மண்ணுார் காட்டு கூட்டுசாலை அருகே உள்ள பங்க்கில், 'நிசான்' காரில் பெட்ரோல் நிரப்பி, பணம் தராமல் இருவர் தப்பினர்.காரை விரட்டிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள், அவர்களை பிடித்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில் பிடிபட்ட நபர்கள், மாங்காட்டை சேர்ந்த அப்துல்காதர், 42, சிங்கபெருமாள் கோவிலைச் சேர்ந்த முகமதுஅப்துல், 30, என்பதும், கூடுவாஞ்சேரியில் காரை திருடி எடுத்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து, இருவரையும், போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X