பொது செய்தி

தமிழ்நாடு

ஏலக்காய் வரத்தும், விலையும் அதிகரிப்பு

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

போடி : போடி நறுமண பொருள் வாரிய ஏல மையத்திற்கு நேற்று ஏலக்காய் வரத்தும், விலையும் அதிகரித்திருந்தது.

கொரோனா ஊரடங்கால் போடி ஏல மையத்தில் இரண்டு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏலக்காய் ஏலம் 10 நாட்களுக்கு முன் துவங்கியது. கடந்த வாரம் நடந்த ஏலத்தில் 18ஆயிரத்தி 956 கிலோ ஏலக்காய் விற்பனைக்கு பதிவானது. சராசரியாக ரூ.ஆயிரத்தி 850 ஆகவும், அதிக பட்சமாக ரூ.2 ஆயிரத்தி 573 ஆக ஏலம் போனது. 4நாட்களுக்கு முன்பு போடியில் நடந்த ஏலத்தில் 9 ஆயிரத்தி 125 கிலோ ஏலக்காய் பதிவானது. சராசரியாக கிலோ ரூ.ஆயிரத்தி 780 ஆகவும், அதிகபட்சமாக ரூ.2 ஆயிரத்தி 210 ஆக ஏலம் போனது.நேற்று நடந்த ஏலத்தில் 49 ஆயிரத்தி 854 கிலோ பதிவானது.

சராசரியாக கிலோ ரூ.ஆயிரத்தி 783 ஆகவும், அதிகபட்சமாக கிலோ ரூ.2 ஆயிரத்தி 569 ஆக ஏலம் போனது. நான்கு நாட்களை காட்டிலும் நேற்று ஏலக்காய் வரத்து அதிகரித்ததோடு, கிலோவிற்கு ரூ.360 அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X