பொது செய்தி

தமிழ்நாடு

மாமல்லை கோனேரி ஏரி மீண்டும் துார்ந்து சீரழிவு

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில் துார் வாரப்பட்ட கோனேரி ஏரி, மீண்டும் சீரழிகிறது.ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலை களின் தேவை குறித்தும், மழைநீரை சேமிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், 'தினமலர்' நாளிதழ் சார்பில், 'நமக்கு நாமே' என, செய்தி வெளியிடப்பட்டது.

பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், தனியார் அமைப்பினர் உள்ளிட்டோர், அந்தந்த பகுதியின் நீராதாரங்களை சீரமைத்தது பற்றி செய்தி வெளியிடப்பட்டது. அதில் ஒன்று, மாமல்லபுரத்தில் உள்ள கோனேரி ஏரி.ஏழு ஏக்கர் பரப்பில், 10 மீட்டர் ஆழத்துடன் இருந்த இந்த ஏரி, நீண்ட காலமாக பராமரிப்பு இல்லாததால், துார்ந்து சீரழிந்தது.இதை துார்வாரி ஆழப்படுத்தவும், படகு சவாரி சுற்றுலாவிற்கேற்ப மேம்படுத்தவும் வலியுறுத்தி, தொடர்ந்து கோரிக்கை எழுந்தது.இதற்கிடையே, தொல்லியல் துறை, பொதுப்பணித்துறை பகுதிகள் இடையே, ஏரி அமைந்துள்ள நிலையில், இதன் கட்டுப்பாடு குறித்து, இரு துறைகள் இடையே, சர்ச்சை நீடித்தது.இதனால், துார் வார முயற்சிக்காத பொதுப்பணித் துறை, ஏரிக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என, கடந்த ஆண்டு, மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்தது.

இதற்கிடையே, பிரதமர் மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங், கடந்த அக்டோபரில், மாமல்லபுரத்தில் சந்தித்த போது, இவ்வூர் மேம்படுத்தப்பட்டது.இதன் ஒரு பகுதியாக, மாவட்ட கலெக்டர் அனுமதிக்கு பின், சென்னையைச் சேர்ந்த இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை நிறுவனம், ஏரியில், சில அடிகள் ஆழம் துார் வாரியது. இதனால், கடந்தாண்டு இறுதியில் பெய்த மழையால், ஏரியும் நிரம்பியது. போதிய பராமரிப்பு இல்லாததால், கோனேரி ஏரியில், மீண்டும் கொடிகள் படர்ந்து, தற்போது துார்ந்து சீரழிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X