பொது செய்தி

தமிழ்நாடு

அவசியம்

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

வருவாய்த்துறை சார்பில் நிலப்பதிவேடுகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. அதனால் நில நிர்வாக பணிகள் எளிமையானது. அதே சமயம் பட்டா மாறுதலுக்கு, வி.ஏ.ஓ.,க்களின் பரிந்துரை தேவையில்லை என்று மாற்றப்பட்டது.

தலைமை சர்வேயர், மண்டல துணை தாசில்தார் ஒப்புதலுடன் ஆன்லைனில் பட்டா மாறுதல் செய்யப்பட்டது. இதனால், நிலம் தொடர்பாக வி.ஏ.ஓ., அலுவலகத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகிறது.இந்நிலையில் நடப்பு நிதியாண்டு முதல் பட்டா பெயர் மாற்றம் செய்ய வி.ஏ.ஓ.,க்களின் பரிந்துரை அவசியம் என அரசு உத்தரவிட்டுள்ளது. தனி கிரயமாக இருந்தால் பத்திரப்பதிவு செய்த சில நாட்களில் தானாகவே பட்டா பெயர் மாற்றமாகி, உரிமையாளருக்கு சிட்டா நகல், ஆன்லைனில் அனுப்பி வைக்கப்படும்.உட்பிரிவுடன் கூடிய கிரயமாக இருந்தால், வி.ஏ.ஓ.,க்கள் கள ஆய்வு நடத்தி, பரிந்துரை செய்வது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, வி.ஏ.ஓ.,க் களுக்கு நிலத்தை அளப்பது, படம் வரைதல் உள்ளிட்டவை தொடர்பாக சிறப்பு பயிற்சி முகாம் நடக்க உள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X