பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் நீதி மையம் சார்பில் 'மொபைல் ஹேண்ட் வாஷ்'

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், மக்கள் நீதி மையம் சார்பில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், 'மொபைல் ஹேண்ட் வாஷ்' கருவி அமைக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து, ம.நீ.ம., காஞ்சிபுரம் வடமேற்கு மாவட்ட செயலர் த.கண்ணன் கூறியதாவது:காஞ்சிபுரத்தில், பொதுமக்கள் அதிகம் கூடும், 10 இடங்களில், மொபைல் ஹேண்ட் வாஷ் கருவி அமைக்கப்பட்டு வருகிறது.முதற்கட்டமாக, பத்ரகாளியம்மன் கோவில் தெரு, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த கருவியில் அமைக்கப்பட்ட பெடலை, கால்களால் அழுத்தினால், மேலே உள்ள பாட்டிலில், கிருமிநாசினி திரவம் வரும். அதில், பொதுமக்கள் தங்களது கைகளை சுத்தம் செய்து கொள்ளலாம்.மேலும், மக்கள் நீதி மையத்தின், 63698 11111 என்ற ஹெல்ப் லைன் எண்ணில் தொடர்பு கொண்டால், அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று, இலவசமாக முக கவசம் வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X