சின்ன வெங்காய சாகுபடியில் நோய் பாதிப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சின்ன வெங்காய சாகுபடியில் நோய் பாதிப்பு

Added : ஜூன் 09, 2020
Share

தேவதானப்பட்டி : பெரியகுளம் பகுதியில் 200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு சின்ன வெங்காயத்தில் நோய் தாக்கி காய்ந்து வருகின்றன.

பெரியகுளம் ஒன்றியம், குள்ளப்புரம், முதலக்கம்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, வைகை புதுார் கிராமங்களில் 200 ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறுகிய கால பயிரான சின்ன வெங்காயம் நடவு செய்து 45 நாள் முதல் 60 நாளில் பலன் கிடைக்கும். இங்கு விளையும் சின்னவெங்காயம் திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு செல்கிறது. நடவு செய்து 45 நாட்கள் ஆன நிலையில் கடும் வெயில் காரணமாக சின்ன வெங்காய பயிரில் நோய் பாதித்து காய்ந்து வருகின்றன. தற்போது ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.25 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்படுகிறது.

நோய் தாக்குதலால்பொருளாதார இழப்பு ஏற்பட்டு விவசாயிகள் கவலையில் உள்ளனர். சங்கரமூர்த்திபட்டி விவசாயி முருகன்: ஒரு கிலோ விதை வெங்காயம் ரூ.70 க்கு வாங்கி நடவு செய்தோம். ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலாவகிறது. நோய் தாக்கியதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X