ஊரக வளர்ச்சி முகமை புதிய கட்டடம் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக வளர்ச்சி முகமை புதிய கட்டடம் திறப்பு

Added : ஜூன் 09, 2020
Share
காஞ்சிபுரம்: சகல வசதிகளுடன் கூடிய, புதிய ஊரக வளர்ச்சி முகமை கட்டடம், நேற்று திறக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திற்கு புதிய கட்டடம், கட்டப்பட்டு வந்தது. தரைத்தளம் மற்றும் முதல் மாடி என, சகல வசதிகளுடன், 6.4 கோடி ரூபாயில், இக்கட்டடம் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டது.இக்கட்டடத்தில், ஊரக வளர்ச்சி திட்ட

காஞ்சிபுரம்: சகல வசதிகளுடன் கூடிய, புதிய ஊரக வளர்ச்சி முகமை கட்டடம், நேற்று திறக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திற்கு புதிய கட்டடம், கட்டப்பட்டு வந்தது. தரைத்தளம் மற்றும் முதல் மாடி என, சகல வசதிகளுடன், 6.4 கோடி ரூபாயில், இக்கட்டடம் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டது.இக்கட்டடத்தில், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர், உதவி இயக்குனர், தணிக்கை அதிகாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அலுவலக அறைகளும், ஒரு கூட்டரங்கம் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல்வர் இ.பி.எஸ்., காணொலி மூலமாக, இந்த கட்டடத்தை, நேற்று திறந்தார்.மாவட்ட கலெக்டர் பொன்னையா, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர், குத்துவிளக்கு ஏற்றி, கட்டடத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தனர்.அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள்கோவில், ஆப்பூர், வெங்கடாபுரம், கொளத்துார், குருவன்மேடு, செட்டிப்புண்ணியம், ரெட்டிபாளையம் ஆகிய ஊராட்சிகளில், ஷியாமா பிரசாத் முகர்ஜி தேசிய ரூர்பன் இயக்க திட்ட நிதி, 12 கோடி ரூபாயில் கட்டப்பட்ட திட்ட பணி கட்டடங்களையும், முதல்வர் இ.பி.எஸ்., நேற்று திறந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X