பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி பணியாளர்கள் சம்பளத்திற்கு சிக்கல்

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

கம்பம் : ஊராட்சிகளுக்கு மாதந்தோறும் வழங்கும் மாநில நிதிக்குழு மானியம் வழங்காததால் ஊழியர்களுக்கு சம்பளம் போடப்படவில்லை.

கிராம ஊராட்சிகளில் நிர்வாகம் செய்வதற்கு மாநில நிதிக்குழு மானியம், 15 வது நிதிக்குழு மானியம், ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானியம் உள்ளிட்ட மானியங்கள் வழங்கப்படுகிறது. மாநில நிதிக்குழு மானிய தொகை மாதந்தோறும் ஊராட்சிகளுக்கு வழங்கப்படும். இந்த மானியத்தில் தான், ஊராட்சிகளில் பணியாற்றும் ஊழியர்கள், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். 15 வது நிதிக்குழு மானியம் மூலம் கிராம ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் செய்வார்கள். தேனி மாவட்டத்தில் 130 ஊராட்சிகளுக்கு 2 மாதங்களாக மாநில நிதிக்குழு மானியம் வழங்கப்படவில்லை.
''
15 வது நிதிக்குழு மானியமும் வழங்கவில்லை. இதனால் கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் செயலர், துப்புரவு பணியாளர், குடிநீர் பணியாளர் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. மானியம் எப்போது அனுமதிப்பது போல் தெரியவில்லை. இதனால் ஊராட்சி பணியாளர்கள் புலம்பி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X