பொது செய்தி

தமிழ்நாடு

'புளிக்கும்' மாங்கனி சீசன்

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

ஆர்.கே.பேட்டை: ஆந்திராவில் இருந்து, மாங்கனி வரத்து இல்லாததால், தமிழக கிராமங்களில் மாங்கனி சீசன், களை இழந்துள்ளது.

ஊறுகாய்க்கும் இதே நிலை தான்.ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில், மலை சார்ந்த இடங்களில் ஏராளமான மாந்தோப்புகள் உள்ளன. இந்த தோப்புகளில் காய்க்கும் மாங்கனிகள், ஆந்திர மாநிலம், சித்துாரில் செயல்படும் மாங்கனி சாறு தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.அதே போல், புத்துார் சந்தையில் இருந்து, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு பங்கனபள்ளி, ருமானி, இமாம்பசந்த், பேனிஷா உள்ளிட்ட ஒட்டு வீரிய மாங்கனிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். கிராமத்து தெருக்களில், கூடையில் வைத்தும் விற்பனை செய்யப்படும்.

நடப்பு பருவத்தில், தமிழக தோப்புகளில், மாங்கனி காய்ப்பு ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. வறட்சி தான் காரணம் என, கூறப்படுகிறது. ஆனால், ஆந்திர மாநிலத்தில், மாங்கனி விளைச்சல் வழக்கம் போல் காணப்படுகிறது.இங்கு பறிக்கப்படும் கனிகள், தமிழகத்திற்கு கொண்டு வர முடியாத சூழல் நிலவுவதால், மாங்கனி பிரியர்கள், இந்த சீசனில் விரக்தி அடைந்து உள்ளனர். மார்ச் முதல், ஜூலை வரையிலான சீசனில், இதுவரை சந்தையில் மாங்கனி கிடைக்கவில்லை.

ஓரிரு சாலையோர கடைகளில் சொற்ப அளவில் விற்பனை செய்யப்படும் மாங்கனியின் விலை, உச்சத்தில் உள்ளது. கோடையில் சூறாவளி காரணமாக, மாம்பிஞ்சுகள் உதிர்வதும், அவை ஊறுகாய்க்காக விற்கப்படுவதும் உண்டு.கோடை மழையோ, சூறாவளியும் வந்தாலும், உதிர்வதற்கு, மரங்களில் பிஞ்சுகள் இல்லாததால், மாங்காய் ஊறுகாயும், இந்த ஆண்டில் தேவையான அளவிற்கு கிடைக்காது என்றே தோன்றுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X