நீர்நிலைகளில் சிறுவர்கள் கும்மாளம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீர்நிலைகளில் சிறுவர்கள் கும்மாளம்

Added : ஜூன் 09, 2020
Share

ஆர்.கே.பேட்டை: ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுவர்களின் கோடை கொண்டாட்டம் துவங்கியுள்ளது. சமூக விலகல் குறித்த விழிப்புணர்வு இன்றி, நீர்நிலைகளில் கும்மாளம் போட துவங்கி உள்ளனர்.

கோடை விடுமுறையில், நீர்நிலைகளில் நீச்சல் பழகுவது சிறுவர்களின் வழக்கம். நடப்பு ஆண்டு, கோடை விடுமுறை இன்றி, ஊரடங்கு காரணமாக வீடுகளில் அனைத்து தரப்பினரும் முடங்கி இருந்தனர்.தற்போது, தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுவர்கள் தங்களின் சுட்டித்தனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். வீட்டை விட்டு வெளியில் செல்லும் சிறுவர்கள், அருகில் உள்ள நீர்நிலைகளில் நீச்சல் பழகவும் செய்கின்றனர்.

தற்போதைய சூழலில், முக கவசம் மற்றும் சமூக விலகல் அவசியம் என, வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அதை அலட்சியப்படுத்தும் விதமாக, நீர் நிலைகளில் தங்களின் சகாக்களும் கூட்டாக நீச்சல் அடித்து வருகின்றனர்.சிறுவர்களின் சுய பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு கருதி, நீர்நிலைகளுக்கு அருகில் எச்சரிக்கை பதாகைகளை வைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X